'கோலி சோடா', படம் ஆரம்பிக்கிறபோது. என் கையிலிருந்த பணம் மூன்று லட்சம் ரூபாய், அடுத்த ஷெட்யூலுக்கு காசிற்கு என்ன செய்யப்போகிறோம்? என எந்தத் திட்டமிடலும், தயக்கமும் இல்லாமல் தான், கையிலிருந்த மூன்று லட்ச ரூபாய் முதலீட்டை மட்டும் நம்பி. இந்தப் பட வேலைகளைத் துவங்கினேன்.
அடுத்து. கையிலிருந்த கொஞ்சம் பணத்தை வைத்து. ஒரு 5D கேமராவை என்னைப்போலவே, வாங்கிவிட்டேன். ஒத்த சிந்தனையுடைய, ஆற்றலுடைய, ஐந்து உதவி இயக்குனர்கள். ஐந்து உதவி ஒளிப்பதிவாளர்கள் என்ற குழுவை ஏற்பாடு செய்துகொண்டு, படப்பிடிப்பு ஆரம்பமானது. "பாதையைத் தேடாதே! உருவாக்கு!' அதுதான் நான். அதுதான் இந்தப் படம். இதே சூழ்நிலையில்தான் இன்றைக்கிருக்கிற அனைத்து உதவி இயக்குநர்களும் இருக்கிறார்கள். அல்லது. முதல் படம் தோல்வியடைந்த எல்லா இயக்குனர்களும் இருக்கிறார்கள்.
முடிவு என்னவென்று தெரியாவிட்டாலும், நீங்களும், இதுபோல முதல் அடியை எடுத்து வைக்கலாம். இப்படி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துக்கொண்டே சென்றோமானால், நிச்சயமாக நமக்கான பாதை உருவாகும். இதைத் தெரியப்படுத்துவதற்காகத்தான் நான் இப்புத்தகத்தில் இவ்வளவு விளக்கங்களையும் சொல்கிறேன். மாறாக, நான் எவ்வளவு கஷ்டப்பட்டு ஜெயிச்சேன் என்ற கதையைச் சொல் வதற்காக அல்ல. இந்நூலில் திரைக்கதை மட்டுமல்லாது. ஒரு திரைப்படம் எப்படி உருவானது? என்பது காட்சிக்கு காட்சிக்கு விவரிக்கப்பட்டுள்ளது. சினிமாவைக் கற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் பயன்பெறும் உதவும் வகையில் இந்நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது.
-SD.விஜய் மில்டன்
Be the first to rate this book.