"ஞாயிற்றுக்கிழமை காலை இதமான பதினொரு மணி வெய்யிலில், அப்பா சைக்கிள் பைக் என எதையாவது நிறுத்தி மராமத்துப் பார்ப்பார். எங்காவது செடிகளுடன் பேசியபடி நிற்கும் என்னிடம், டூல் பாக்ஸ்ஸை எடுத்து வரச் சொல்வார். உள்ளிருந்து தேவையானவற்றை அப்பா தேடி எடுக்கும் போது எழுகிற உலோகச் சத்தங்களை, ஓர் இளவெய்யிலின் குரல் என நினைத்துக் கொள்வேன். அந்த டூல்ஸ்களை வைத்து, தளர்த்த வேண்டியதைத் தளர்த்தி, இறுக்க வேண்டியதை இறுக்குவார். சக்கரத்தை ஒருமுறை சுற்றிவிட்டு எழுந்து போய்விடுவார். அப்படியொரு டூல் பாக்ஸ் தான் கவிதைப் புத்தகங்களும். ஒரு இளவெய்யிலில் பிரித்துப் பாருங்கள். பேச்சுக் கொடுங்கள். வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள்."
Be the first to rate this book.