ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்த சிறிய நூலின் இன்றைய வாசிப்பு பெறுமதி என்ன என்றொரு கேள்வி எழுந்தது. சாமிநாத சர்மாவின் சிக்கலற்ற, நேரடியான தெள்ளிய மொழி ஒரு அமர்வில் இந்த நூலை வாசிக்க வைக்கிறது. இந்த நூலின் பெறுமதி என்பது ஏதோ ஒருவகையில் அதில் பேசப்படும் ஆளுமைகளின் பெறுமதியும் தான்.
சாமிநாத சர்மா இந்த நூலை எழுதியபோது அவருக்கு என்ன நோக்கம் இருந்திருக்க முடியும்? காந்தி அப்போது தேச நிர்மாண திட்டங்களில் முழுவீச்சுடன் ஈடுபட்டிருந்தார். இந்தியா முழுக்க ஹரிஜன யாத்திரை மேற்கொண்டு தீண்டாமைக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டு சனாதனிகளின் எதிர்ப்பை ஈட்டிக் கொண்டார். காந்தி காங்கிரசில் இருந்து விலகி இருந்த காலம். காங்கிரசும் மாகாண அரசியலில் ஈடுபட்டு ஆட்சியில் அமர்ந்த காலகட்டம். காந்தியின் வசீகரத்தை தாண்டி வேறு விஷயங்களை யோசிக்க வேண்டிய நிர்பந்தம் காங்கிரசுக்கு இருந்தது.
அதன் அதிகார வேட்கை மீது ஐயம் கொண்டார், தொண்டர்களின் வன்முறைக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார். இந்த பிளவுகளை கண்டு அஞ்சிய ஒரு கலை மனம் தான் சாமிநாத சர்மா உடையது. இத்தகைய உரசல் போக்குகள் விடுதலை எனும் பெரிய லட்சியத்திற்கு பாதகமாக விளங்கி விடக் கூடாது எனும் கவனத்தோடு எழுதப்பட்ட நூல் இது.
Be the first to rate this book.