'ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளது, எதுவுமே இல்லாததிலிருந்து எதுவும் வராது' என்ற பேரி காமனரின் வார்த்தைகளை நாளது வரை ஆளும் அரசுகள் புரிந்து கொள்ளவில்லை. இயற்கை, நீர்நிலைகள், மறைநீர் கருத்தாக்கம், காட்டுயிர்ப் பாதுகாப்பு என இப்புவியின் மூலவளங்கள் குறித்து பின்தங்கிய நாடுகள் இன்றளவும் கவனம் செலுத்தவில்லை. என்பதுடன் மேலும் மேலும் பாதிப்புகளையும், இயற்கை வளச்சுரண்டலையும் ‘வளர்ச்சி’ என்ற பெயரில் முன்னெடுத்து வருகின்றன. அதன் விளைவாகத்தான் கானமயில் போன்று சிவிங்கிப்புலி, வரகுக்கோழியை தமிழகம் இழந்துள்ளது. கானமயிலின் இன்றைய எண்ணிக்கை 260க்குள் என்பதுதான் அதிர்ச்சியான செய்தியாக உள்ளது. வட இந்தியாவில் தார் பாலைவனத்தையொட்டியுள்ள பகுதிகளின் காப்பிடப் பகுதிகளில் அவை அழிவின் விளிம்பில் வாழ்ந்து வருகின்றன. அதிலும் உயர் மின்னழுத்தக் கோபுரங்களால் பெரும் ஆபத்தையும் எதிர்கொண்டுள்ளன. இந்த அரிய, அழகிய கானமயிலை நம்மில் எத்தனை பேர் பார்த்திருப்போம்? இரசித்திருப்போம்?
Be the first to rate this book.