'சுவடு தெரிகிற தடத்திலே செல்ல மறுத்து, புதுத்தடம் போட்டுக் கொண்டு இலக்கியத்தின் எல்லைகளைச் சற்று விரிவடையச் செய்ய முயன்றவர்களைத்தான் சோதனைக்காரர்கள் என்று சொல்லலாம். க.நா.சு.வின் இந்த வாக்கியத்தைத்தான் 'எழுத்து' தன் குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்படுகிறது என்று சி.சு.செல்லப்பா குறிப்பிடுகிறார்.
மேற்கண்ட வாக்கியத்தின்படி எழுத்துவின் குறிக்கோள் வெற்றி பெற்றதா, தோல்வி அடைந்ததா என்று 21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பார்க்கும்போது வெற்றி பெற்றதாகவே கொள்ளலாம். ஏனென்றால் புதுக்கவிதையின் வளர்ச்சிக்கு தடம் அமைத்த பெருமை 'எழுத்து'க்கு உண்டு. விழுதுகளைப் பல மடங்குகள் வளர்த்து ஆலமரக் காடுகளாக இன்றைய புதுக்கவிதை வளமுற்று செழித்து விளங்குவதற்கு 'எழுத்து'தான் அடிப்படையாகும். தான் எடுத்துக்கொண்ட கொள்கைக்கு ஏற்றவாறு 'எழுத்து' சாதனை புரிந்ததினால், நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஓர் மைல் கல்லாக அது இருக்கிறது.
Be the first to rate this book.