நாள்தோறும் மாதவனோடு வாக்கிங் செல்பவன் நான். அவர் கவிதைகளைப் படிக்கும்போது, நம்மோடு நடந்து வந்த மதவன் எழுதியதா இது? எனத் தோன்றும். குழந்தைகளை, மனைவியை பில்லியனில் வைத்து பள்ளியில் விடுகிற மாதவனும், கவிதை எழுதுகிற மாதவனும் வேறு வேறு நபர்களா? மயங்குவேன்.
'நண்பகல் நேரத்து மயக்கம் மம்முட்டியைப் போல, சுவிதை எழுதும்போது திடீரென தன் இருப்பிடத்திலிருந்து வேறு ஓர் இடத்துக்கு நகர்ந்து சென்றுவிடுகிறார் மாதவன்.
அகநிலை அனுபவத்தின் ஒட்டுமொத்த வடிவத்தில் ஏற்படும் ஒரு தற்காலிக மாற்றமாக மாதவன் கவிதை எழுதுவதைப் பார்க்கிறேன் நான்.
உங்கள் வாழ்க்கையை வாழ இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. ஒன்று, ஒன்றும் அதிசயம் இல்லை என்பது போல் உள்ளது. மற்றொன்று, எல்லாம் அதிசயம் போல!' என்பார் ஜன்ஸ்டின். மாதவன் காய்கறிகள் வாங்க மார்க்கெட்டுக்கு 'ஒன்றும் அதிசயமில்லை' என்பதுபோல் போகிறார். அதே மாதவனுக்கு, கவிதை எழுத உட்காரும்போது எல்லாம் அதிசயம்போலவும் இருக்கிறது.
இது ஒன்றும் அதிசயம் இல்லை. மாதவன் எனும் கவிஞன், சமூகம் தனக்கு கையளித்த ஞாபகத் தொகுப்பை வீசி எறிந்துவிடுகிறார். பிறகு, தனியறையில் அமர்ந்து 'எழுமின் அன்பே' என்கிறார்.
-கரிகாலன்.
Be the first to rate this book.