"காணாமல் போன தன் எருதினைத் தேடிக் கொண்டிருக்கும் ஒரு மேய்ப்பன்"
என்பது ஜென் மரபில் சொல்லப்படும் ஒரு குறியீடு. கவிஞனும் அத்தகைய ஓர் இடையளே.
'எங்கிருந்தோ வந்தவர்கள் போல் தோன்றும் கவிஞர்களின் வரிசையில் ரமீஸ் பிலாலியும் இச்சிறு நூலின் வழியாக 'கவிஞன் நான்' என்று அறிவிக்கிறார்.
தெளியாத மறை நிலங்களின் ஈரச் செம்புலத்தில் நடந்து போன எருதின் கால்தடம் என்று கவிதையை அடையாளம் காண்கிறார் ரமீஸ் பிலாலி, இந்நூலின் ஒவ்வொரு சுவிதையும் அத்தகைய ஒரு கால்தடமாய் பதிந்துள்ளது. வாசித்தால் உங்கள் மன நிலங்களிலும் அவை பதியும்.
Be the first to rate this book.