இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் மாத இதழாக வெளிவந்த "ஜனநாயகம்" என்ற தமிழ் இதழில் 1947 டிசம்பர் மற்றும் 1948 பிப்ரவரி ஆகிய மாதங்களில், தோழர் ப. ஜீவானந்தம் அவர்கள் "ஈரோட்டுப் பாதை சரியா?" என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதினார். ஈ.வெ.ரா.வின் அரசியல் - சமூகவியல் அணுகு முறைகளைக் கடுமையாக விமரிசித்தும். அவரது பல்டிகளைப் பட்டியலிட்டும் எழுதினார். அது பின்னர் தனி நூலாக வெளியிடப்பட்டது. பல்வேறு வெளியீட்டகங்களும் அதை மறுவெளியீடு செய்தன.
இப்பொழுது பன்மைவெளி வெளியீட்டகம் அந்நூலை"ஈரோட்டுப் பாதை சரியா?" என்ற அதே தலைப்பில் வெளியிடுகிறது.
கம்யூனிஸ்ட்டுக் கட்சித் தலைவர் ப. ஜீவானந்தம் அவர்கள் ஈ.வெ.ரா.வுடன் சேர்ந்து செயல்பட்டு, அவரின் இரட்டை வேடங்களை, சூழ்ச்சிகளை அடையாளம் கண்டவர்! எனவே, இக்காலத் தமிழ் இளையோர் ஈ.வெ.ரா.வை அடையாளம் காண இந்நூல் பயன்படும்.
தாறுமாறாக தவறாகத் தீர்வு சொல்வது ஈ.வெ.ரா.வுக்கு இளமையி லிருந்து முதுமைவரை தொடர்ந்த மனநோய் என்பதை இந்நூலில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
- பெ. மணியரசன்
Be the first to rate this book.