சர்வாதிகாரம் எத்தனை மோசமான விளைவுகளை உண்டாக்குமென்பதற்குச் சமகால உதாரணம் சிரியா.
தேசத்தின் பாதி மக்கள் அகதிகளாகிப் போனார்கள் என்ற செய்தி, அத்தனை சுலபமாகக் கடந்துவிடக் கூடியதல்ல. ஊழல், அடக்குமுறை, நிர்வாகக் குளறுபடி என அரசின் சீர்கேடுகள் ஒரு புறம். ஏழைமை, பஞ்சம், தீவிரவாதம் என்ற பக்கவிளைவுகள் மறுபுறம்.
இவை அனைத்தையும்கூடப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் உயிர் வாழ்வதற்கே மக்களுக்கு உரிமையில்லையென ஓர் அரசு முடிவெடுப்பது எத்தனை குரூரமானது!
அவலங்கள் அன்றி வேறெதையுமே கண்டறியாத சிரியாவின் மக்களை அந்நிலைக்குத் தள்ளியது எது? சிக்கலின் ஆணிவேர் வரை சென்று ஆராய்கிறது இந்நூல்.
Be the first to rate this book.