ஆயா
ஆயிரம் பௌர்ணமி
கண்டவளென ஆயாவை
கை காட்டி
அடையாளம் சொல்கிறார்
அடுப்படித் தாண்டி
அடுத்தொன்று கண்டிலேனென
அவரும் சொல்லவில்லை
எவரும் கேட்கவில்லை
நினைவுகள்
எவருடையவராகவோ
ஆகியிருக்கலாம்
எதார்த்தமாய் எதிர்ப்படும்
புகைப்படமொன்றின்
எப்போதோ கடந்தவராயிருக்கலாம்
உருவமதை உருப்பெருக்கி
உறைந்து கடக்கையில்
உள்ளிருக்கும் ஈர நினைவுகளில்
ஒரு முறை மூழ்கி
திரும்பியிருக்கலாம்!
Be the first to rate this book.