தோழர் ரமாதேவியின் இந்த நூல் பெண்கல்வி குறித்த ஒரு முக்கியமான நூல். சர்வதேச அளவில் பெண் கல்வியின் நிலை என்னவாக இருக்கிறது. அதற்காக ஐ.நா. சபையும் அதன் உறுப்பு அமைப்புகளும் என்னவெல்லாம் முயற்சிகளை முன்னெடுக்கின்றன என்பதை நமக்கு அறிமுகம் செய்வதோடு, நம் நாட்டில் அது என்னவாக இருக்கிறது என்கிற புள்ளிவிவரங்களையும் கவலைகளையும் நம்மோடு பகிர்வதாக இந்நூல் அமைகிறது. அடிப்படையில் இந்த நூல் பெண்கல்வி குறித்த முழுமையான ஓர் நூலாக சர்வதேச அரங்கில் வைத்துப் பிரச்னைகளை அலசும் நூலாக அமைந்துள்ளது. வரவேற்க வேண்டிய, வாசிக்க வேண்டிய முக்கியமான நூல்.
-ச. தமிழ்ச்செல்வன்
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியையாகப் பணியாற்றும் முனைவர் ரமாதேவி இரத்தினசாமி, ஐ.நா., யுனெஸ்கோ, யூனிசெஃப், உலக வங்கி, ஐரோப்பிய யூனியன் போன்ற அமைப்புகள் நடத்திய கருத்தரங்குகளில் மகளிர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துப் பல்வேறு நாடுகளுக்குச் சென்று உரை நிகழ்த்தியுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்பின் தலைவர், சார்க் மகளிர் வலையமைப்பின் திட்டக்குழு உறுப்பினர், பெல்ஜியம் உலகக் கல்வி அமைப்பின் உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் பொறுப்புகள் வகிக்கிறார்.
Be the first to rate this book.