பெண்ணிய நோக்கில் எழுதப்பட்ட பத்துக் கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. இவற்றில் சில கொரோனா காலகட்டத்தில் குடும்பங்களில் ஏற்பட்ட சிக்கல்களைப் பேசுகின்றன. இக்கதைகளின் பெண்கள் பல வயதினராக. பல பொருளாதாரப் பின்புலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். தங்களுக்கு நேரும் சிக்கல்களை ஆளுமையுடன் சமாளித்துவிடும் திறன் மிகுந்தவர்களாக இப்பெண்கள் இருக்கின்றனர். இத்தொகுப்பிலுள்ள, 'இதுதான் காதல் என்பதா?' கதை பண்டைய புகார் நகரையும் மணிமேகலையின் துறவு உறுதியையும் நம் கண்முன் நிறுத்துகிறது. 'எங்களோட கதை' பல பெண்களின் கூட்டுக் குரலாக ஒலிக்கிறது. சமூகத்தில் பெண்கள் என்னென்ன இன்னல்களைச் சந்திக்கிறார்கள்; அவற்றை எப்படி வெற்றிகரமாகக் கடந்து வருகிறார்கள் என்பதை இத்தொகுப்பு சுட்டிக் காட்டுகிறது.
தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருது பெற்ற தஇரா.பிரேமா. தமிழ்ப் பேராசிரியர்: பெண்ணிய ஆர்வலர்; எழுத்தாளர்: ஆய்வாளர். இவர். 27 ஆண்டுகள் கல்லூரிப் பேராசிரியர் பணியிலும். நான்கு ஆண்டுகள் கல்லூரி முதல்வர் பணியிலும், 30 வருடங்கள் ஆய்வுப் பணியிலும் ஈடுபட்டவர். இவர் 23 நூல்களையும், 250-க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் பதிப்பித்த நூல்கள் 3. இவர் எழுதிய 'பெண்ணியம்' என்ற நூல் 12 பதிப்புகளைக் கண்டுள்ளது. இவரது பெண்ணிய நூல்கள். தமிழகப் பல்கலைக்கழகங்களிலும், பல தன்னாட்சிக் கல்லூரிகளிலும், பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்திலும் பாடநூலாகவும் நோக்கு நூலாகவும் எடுத்தாளப்படுகின்றன. இவரின் இரண்டு நூல்களை சாகித்ய அகாடமி வெளியிட்டுள்ளது. இவரின் இரண்டு நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவர இருக்கின்றன. இலக்கிய வட்டத்தில் 'பெண்ணியம் பிரேமா' என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
Be the first to rate this book.