தகவமைக்க மறுக்கும் நுண் பார்வையிலிருந்து வாழ்வை நறுக்குகளாகப் பிரதி ஆக்கம் செய்யும் குறியீடுகளாகவும் படிமங்களாகவும் கண்டெடுக்கப்பட்டவைகள் இலக்குமிகுமாரனின் கவிதைகள்... குறியீடும் படிமமும் சர்வதேச மொழியென இன்றும் நம்பப்படுகிற சூழலில் வாழ்வில் வந்து சூழும் அனைத்து மேலாண்மைகளையும் எதிர்க்கும் வெளிச்சத்தை/விழிப்பை ஓர் அனுபவமாக வாசகருள் விளைவிக்கும் கிரியா ஊக்கிகளாக அவைகள் இயங்கும் தன்மை கொண்டவைகளாக மிளிர்கின்றன.... மனிதர்கள் சமப்பட வேண்டும் என்பதைத் தவிர பேசுவதற்கு ஏதும் இல்லை எனக் கருதும் இலக்கும்குமாரன் கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்க் கவிதை வெளியில் இயங்கி வரும் ஒரு முக்கிய ஆளுமையாவார்..
-லார்க் பாஸ்கரன்
Be the first to rate this book.