கிராமப்புறபட்டியல் வகுப்பு இளைஞர் ஒருவரின் படிப்படியான அரசியல் வளர்ச்சியை இந்நூலின் வாயிலாக நாம் அறிய முடிகிறது. ஓரிருநிமிடங்களுக்கு மேல் மேடையில் பேசத்தயங்கிய இளைஞர் ஒருவர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் தமிழ்நாட்டின் பேச்சாளராக வளர்ச்சியுற்றது மந்திரவாதத்தால் நிகழவில்லை. தோழர் அப்பாத்துரையின் ஆற்றல், விடாமுயற்சி, கடின உழைப்பு இவற்றைஉணர்ந்துகொண்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இவரை சரியான தடத்தில்பயணிக்க வாய்ப்பு வழங்கியது. என்அன்பு மாணவர் அப்பாத்துரை, தனக்குக் கிடைத்த வங்கிப் பணியை உதறிவிட்டு தோழர் ப.மாணிக்கம் அவர்களின்வேண்டுகோளுக்கிணங்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராகப் பணியாற்ற வந்தவர். அவர் தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக இருந்தபோது, குறு நூல்களை எழுதும்படிஎன்னைத் தூண்டி அவற்றைக் கட்சி வெளியீடாகக் கொண்டு வந்தவர். சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியபோது சட்டமன்ற நூலகத்திலிருந்தும், நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியபோது நாடாளுமன்ற நூலகத்திலிருந்தும், பல அரிய நூல்களைப்பெற்றுத் தந்து படிக்க உதவினார். என் எழுத்துப் பணியில்அவரது பங்களிப்பும் உண்டு. பல அரசியல் பணிகளுக்கிடையில்நல்ல நூல்களைத் தேடிப் படிக்கும் பழக்கத்தைக் கொண்டவர். தோழர்அப்பாத்துரையின் வாழ்க்கையும், இடதுசாரி அரசியல் வாழ்க்கையும் பிரிக்க முடியாத ஒன்று.
- ஆ.சிவசுப்பிரமணியன்
Be the first to rate this book.