பர்மாவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய அகதிகள் வழிப் பயணத்தின் போது அடைந்த இன்னல்களை எல்லாம் இந் நூலைப் படிப்பதற்கு முன்பே நான் ஓரளவு அறிந்திருந்தேன். ஆம்; இரண்டாவது உலகப் பெரும்போரின் போது தாயகம் திரும்பிய அகதிகளை வரவேற்று அவர்களுக்கு கஷ்ட நிவாரணம் அளிக்க சென்னை நகரில் மேயர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் செயலாளனாக நான் இருந்தேன். அரிக்கான் வழியாக கல்கத்தாவுக்கு வந்து, அங்கிருந்து ரயில் மூலமாக சென்னை நகருக்கு வருகை தந்த அகதிகளை, நாள்தோறும் சென்ட்ரல் ஸ்டேஷனில் வரவேற்று, அவர்களுக்கு என நகரில் பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் அவர்களைக் கொண்டு போய்ச் சேர்ப்பேன். இந்தப் பணியில் ஒரு மாதத்திற்கு மேலாக ஈடுபட்டிருந்தேன். அப்போது, பர்மா அகதிகள் வழிப்பயணத்தின் போது தாங்கள் பட்ட கஷ்டங்களைக் கதை கதையாகச் சொல்லக்கேட்டு கண்ணீர் வடித்தேன். ஆயினும், பர்மா வாழ் தமிழர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை முறைப்படுத்தி காரண காரியங்களோடு ஆசிரியர் சர்மா இந்நூலில் விளக்கியுள்ளதை படித்த போது, பல இடங்களில் அழுதேன். பயண நூல்கள் பலவற்றைப் படித்துள்ளேன். நானும் இரண்டு நூல்களை எழுதி இருக்கிறேன். அந்த வகையில் சேர்ந்தது அல்ல இது. மரண யாத்திரையைக் கூறும் நூல் இது. இதற்கு இணை சொல்ல இன்னொரு நூல் எனது நினைவிற்கு வரவில்லை.
-ம.பொ.சிவஞானம்
Be the first to rate this book.