திராவிடம், தமிழ்த் தேசியம் என்ற அரசியல் அடையாளங்கள் எல்லாம் உருவாவதற்கு முன்பிருந்தே, காங்கிரஸ், பாரதிய ஜனதா, நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் என்ற அமைப்புகள் தோன்றி அவை இதுகுறித்த தங்கள் நிலைப்பாடு என்ன என்பதை வரையறை செய்துகொண்டு களங்காண்பதற்கு முன்பே தன்னெழுச்சியாக இன்று நாம் நினைவுகூரும் பெருந்தலைவர்களையெல்லாம் இணைக்கும் மையப்புள்ளியாகத் தென்னகத்தில்... குறிப்பாகத் தமிழ் நாட்டில் மொழி இருந்திருப்பதை இந்த சரிதை முழுக்க 'ஆட்சிமொழிக் காவலர்' திரு. இராமலிங்கனார் வெவ்வேறு காலகட்டங்களில் ஆளுமைகளுடனான அவரது சந்திப்புகளின்போது நடந்த சம்பவங்கள், அவர்களுக்கிடையே நடந்த உரையாடல்கள் வாயிலாக நம்மால் விளங்கிக்கொள்ளமுடியும்.
தமிழ் வெல்லும் என்று கையொப்பமிட்ட இருபெரும் முதல்வர்களுடனான நட்பு அவருடைய உயரத்தை என்றும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிவுறுத்திக்கொண்டே இருக்கும். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழியை ஆட்சிமொழியாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். என்பதைச் சட்டமாக இயற்றி, 1958-ல் அது நடைமுறைக்கு வரும்பொழுது அதை மேற்பார்வையிடும் சிறப்பு அலுவலராக (Special Officer) இருந்த அவர் ஆற்றிய களப்பணி, ஆட்சிமொழிக் குழுவிலிருந்து மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் (State Official Legislative Language Commission) 2( 2 2 ஆட்சிமொழி அகராதி முக்கியமான தளவாடமாக அமைந்ததால் ஆட்சிமொழிக் காவலர் என்று அழைக்கப்பட்டார்.
அவர் இயற்றிய 50க்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் அவரது நுணுக்கமான அறிவியல் பார்வை ஆங்கிலப் புலமை, சட்ட நிபுணத்துவம், வரலாற்று பாண்டித்தியம் இவற்றுக்கான சான்றுகள். இந்தியாவிற்கே ஆட்சிமொழியாகும் தகுதி தமிழுக்கு இருக்கிறது என்று அவர் ஆணித்தரமாக நம்பினார்.
Be the first to rate this book.