சீராளனின் கவிதைகளில் சொற்களும் வண்ணங்களும்தான் மையச் சரடாக இயங்குபவை.வாழ்வில் தான் எதிர்கொண்ட சொற்களைக் கவிதை கலைடாஸ்கோப்பில் போட்டு வாழ்வை வரைய முயல்கிறார்.அவை இல்லாத தருணங்களில் வண்ணங்களைத் துணைக்கழைக்கிறார். நமக்குக் காட்டும் காட்சியே ஒரு கித்தானில் வரைந்துக்கொண்டிருக்கிற அல்லது கற்பனையில் நம்மை வரைய வைக்கும் யுக்தியைக் கொண்டதாக இருக்கிறது. இந்தத் தொகுப்பு ஒரு ஓவியத்தை வாசிக்கும் மொழியின் குரலாக எதிரொலிக்கிறது. ஓவியக் கலைஞனும் எழுத்துக் கலைஞனும் சந்தித்துக்கொள்ளும் புள்ளி, வாசிப்பனுவத்துக்கு மட்டுமல்ல இலக்கிய வெளிக்கும் அவசியமானது என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
-கவிஞர் அமிர்தம் சூர்யா
Be the first to rate this book.