'என் தராசில் சில நாவல்கள்' என்ற இந்த நூலில் சு.கருப்பையா அவர்கள் இருபத்தைந்து நாவல்கள் மீது தன்னுடைய பார்வையை முன்வைத்திருக்கிறார். இதில் எந்தப் பார்வையும் வெறுமனே நூலை அறிமுகம் செய்வதாக இல்லாமல் விமர்சனத் தரத்துடன் அமைந்துள்ளது. இந்த இருபத்தைந்து நாவல்களில் ஏறக்குறைய இருபது நாவல்கள் ஏதோ ஒரு விதத்தில் வரலாற்றுடன் தொடர்புடையதாக இருப்பதென்பது இவருடைய வாசிப்பின் / விமர்சனத்தின் தேர்வை நமக்கு அறிவிக்கின்றது.
ஒவ்வொரு விமர்சனமும் எழுதிய தேதியுடன் இந்நூல் வெளியாகியிருக்கிறது. இந்தத் தேதிகளுடன் அன்றைய சமூக, அரசியல் சூழல் போன்றவற்றுடன் பொருந்திப் போவதாக இவ்விமர்சனங்கள் இருக்கின்றனவா என்பதைச் சரிபார்ப்பதற்கு வாசிப்பவர்களுக்கு இது உதவும்.
இவரை அறிய அல்ல. இவர் மூலமாக பிறரை / பிறரின் எழுத்துகளை அறிய இன்னும் நிறைய..........
Be the first to rate this book.