பூசாரி எழுந்து பார்த்தபோது வீதியில் இருள் நிரம்பியிருந்தது. வீதி விளக்குகள் இன்றும் ஏனோ எரியவில்லை. வீடுகள் நிழலுருவங்களாய்ப் புலப்பட்டன. ஊர் அடங்கிவிட்டது. அடுத்த வளவில் நாய்கள் குரைத்தன. திண்ணையிலிருந்து இறங்கி நடந்தார். பாவடிக்கல் வழியாகச் செல்லும் தடத்தில் நடக்கத் தொடங்கினார். வானம் விண்மீன்கள் நிறைந்து காணப்பட்டது. மூன்றாம் பிறை தேய்ந்து வெகுநேரமாகியிருந்தது. களிமண் பரவியிருந்த குட்டையில் இன்னும் மழைநீர் தேங்கியிருந்தது. பக்கத்துக் கொறங்காட்டில் ஆள்காட்டிகள் வீறிட்டதுபோலக் கத்திக்கொண்டிருந்தன. பனைகள் வெறித்து நின்றன. தொறட்டிமரம் சலனமற்றுக் காணப்பட்டது. பூசாரி கல்வாசற்படிக்கு வெளியே போய் நின்றார். கருப்பணரைப் பார்த்தார். சத்தமாகக் கத்தினார்.
- கருப்பண வெளி குறுநாவலிலிருந்து...
Be the first to rate this book.