5 நம் வாசிப்பு அனுபவத்தையும் அணுகுமுறையையும் வளர்க்கும் கவிதைகள்
இக் கவிதை புத்தகத்திலுள்ள கவிதை அத்தனையும் சமூக அக்கறை கொண்ட கவிதைகள்.
ஒவ்வொரு கவிதையும் எளிய மனிதருக்கான கவிதைகள்
எளிய மனிதரும் புரிந்து கொள்ளக்கூடிய
கவிதைகள்.
இப் புத்தகத்திலுள்ள கவிதைகளை வாசித்தால் நம் வாசிப்பு அனுபவமும்
சமூகம் மீதான பார்வையும் நிச்சயமாக
அடுத்த நிலைக்கு நிச்சயம் பேகும்.
கவிதைகள் ஒவ்வொன்றும் சமூகக்கடலில்
முழ்கி எடுத்த முத்துக்கள்.
அதில் ஒரு கவிதை
கல்வியா..
செல்வமா...
வீரமா...
என நாம்
கதைத்துக் கொண்டிருந்தபோதுதான் முன்னிரண்டைக் கவர்ந்து
' அவர்கள் '
சிரித்தபடி போயினர்
நாமோ மூன்றாவதில்
யார் பெரியவரென முறுக்கிக் கொண்டிருந்தோம் .
பின்பு வந்த , ' மூவர் '
நம்மை
பிடரியில்
அடித்துப் பேசினர்
இழந்த இரண்டில்
கொஞ்சம்
எட்டிப் பிடித்தோம்
இப்போது
நின்றுகொண்டிருக்கிறோம்
நீலமா...
சிவப்பா....
கருப்பா....
என
ஆனால்
தோழனே.....
‘ அவர்கள் ’
நீண்ட தூரம் போய்விட்டனர் .
கவிதையின் ஒவ்வொரு வரியையும்
விவாதப் பொருளாய் எடுத்துக்கொண்டு
பல மணிநேரம் விவாதிக்கலாம்.
ஆழ்ந்த உணர்வுப் பூர்வமான அரசியல்
இழந்தது ஏமாந்தது
பிரிந்து கிடப்பது என விவாதம் நீண்டு கொண்டே போகும்.
இக் கவிதை நிச்சயமாக பேசப்பட வேண்டும்
உணர்ந்து வாசித்தால்
கவிதையை எளிதில் கடக்க முடியாது.
முழுதாய் பத்து வரிகள் கூட இல்லாத
கவிதை.
மூன்று தலைமுறை
அரசியல்,
சாதிய, வர்க்க, மற்றும் இன வரலாறு
பற்றி பேசுகிறது
சாதிய ஒடுக்குமுறை
சாதிய வன்முறை
சிதறி ஒற்றுமையின்றி இருக்கும்
சிறுபான்மையினர் அரசியலின் இன்றைய நிலை, சழூகச் சூழல் என கவிதை விவரிக்கும்
ஒவ்வொரு வரியிலும்
ஆழ்ந்த அரசியல்
இழந்தது ஏமாந்தது
பிரிந்து கிடப்பது என
விவாதம் நீண்டு கொண்டே போகும்.
கல்வியையும்
செல்வத்தையும்
பறித்தது மட்டுமின்றி நம் முன்னோரை பார்த்து சிரித்தும் சென்றிருக்கிறான்.
யாரவன்? விடை காணுங்கள் கவிஞரின் கோபம் உங்களுக்குள்ளும் வரும்.
வீரத்தில் யார் பெரியவர் என சண்டை போட்டுக் கொண்டிருந்தோம்.
கவிஞர்
எங்கே? யார்? எதற்காக? என்று விவரிக்கவில்லை சற்று யோசித்து பார்த்தால் புரியும் நாம் எதை நோக்கி போயிருக்க வேண்டும் எதை நோக்கி போய்க் கொண்டிருந்தோம் என்று.
பின்பு வந்த மூவர்
இதுதான் கவிதையின் முக்கியமான வரி
யார் அந்த மூவர்
இன விடுதலை
வர்க்க விடுதலை
சாதிய விடுதலை
என நம்மை வழி நடத்திய அந்த மூவர்
யாரென்று நான் சொல்லப்போவதில்லை
தேடுங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
பின்பு வந்த மூவர் இந்த ஒற்றை வரி போதும் கவிஞர் எத்தனை வருட வாசிப்பு அனுபவம் கொண்டவர் என்று உணர
இழந்த இரண்டில்
கொஞ்சம்
எட்டிப் பிடித்தோம்.
மூவர் வந்த பிறகு
இந்தியச்சமூகம் அடைந்த பயனை இத்தனை இரத்தினச் சுருக்கமாக
வேறு யாரும் சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை. இதற்காகவே தனிப் பெரும் பாராட்டுக்கள் கவிஞருக்கு.
இவ்வளவு பட்ட பின்பும்
நாம் எங்கே நின்று கொண்டிருக்கிறோம்
தோழனே என்று கூறி நான்கு புள்ளிகள் வைத்திருப்பார் கவிஞர்
தோழனே....
வார்த்தைகளால் விவரிக்க முடியாத கோபத்தை அக்கறையை ஆற்றாமை
தவிப்பை தோழனே...... என்றிருப்பார்
புள்ளிகளால் கூட கவிதை சொல்லி இருக்கிறார் கவிஞர்.
இது சாதாரண கவிதை இல்லை ஒரு யுகத்தின் வரலாறு பேசும் கவிதை
அனைவரும் வாசித்து யோசிக்க வேண்டிய கவிதை.
5 நம் வாசிப்பு அனுபவத்தையும் அணுகுமுறையையும் வளர்க்கும் கவிதைகள்
இக் கவிதை புத்தகத்திலுள்ள கவிதை அத்தனையும் சமூக அக்கறை கொண்ட கவிதைகள். ஒவ்வொரு கவிதையும் எளிய மனிதருக்கான கவிதைகள் எளிய மனிதரும் புரிந்து கொள்ளக்கூடிய கவிதைகள். இப் புத்தகத்திலுள்ள கவிதைகளை வாசித்தால் நம் வாசிப்பு அனுபவமும் சமூகம் மீதான பார்வையும் நிச்சயமாக அடுத்த நிலைக்கு நிச்சயம் பேகும். கவிதைகள் ஒவ்வொன்றும் சமூகக்கடலில் முழ்கி எடுத்த முத்துக்கள். அதில் ஒரு கவிதை கல்வியா.. செல்வமா... வீரமா... என நாம் கதைத்துக் கொண்டிருந்தபோதுதான் முன்னிரண்டைக் கவர்ந்து ' அவர்கள் ' சிரித்தபடி போயினர் நாமோ மூன்றாவதில் யார் பெரியவரென முறுக்கிக் கொண்டிருந்தோம் . பின்பு வந்த , ' மூவர் ' நம்மை பிடரியில் அடித்துப் பேசினர் இழந்த இரண்டில் கொஞ்சம் எட்டிப் பிடித்தோம் இப்போது நின்றுகொண்டிருக்கிறோம் நீலமா... சிவப்பா.... கருப்பா.... என ஆனால் தோழனே..... ‘ அவர்கள் ’ நீண்ட தூரம் போய்விட்டனர் . கவிதையின் ஒவ்வொரு வரியையும் விவாதப் பொருளாய் எடுத்துக்கொண்டு பல மணிநேரம் விவாதிக்கலாம். ஆழ்ந்த உணர்வுப் பூர்வமான அரசியல் இழந்தது ஏமாந்தது பிரிந்து கிடப்பது என விவாதம் நீண்டு கொண்டே போகும். இக் கவிதை நிச்சயமாக பேசப்பட வேண்டும் உணர்ந்து வாசித்தால் கவிதையை எளிதில் கடக்க முடியாது. முழுதாய் பத்து வரிகள் கூட இல்லாத கவிதை. மூன்று தலைமுறை அரசியல், சாதிய, வர்க்க, மற்றும் இன வரலாறு பற்றி பேசுகிறது சாதிய ஒடுக்குமுறை சாதிய வன்முறை சிதறி ஒற்றுமையின்றி இருக்கும் சிறுபான்மையினர் அரசியலின் இன்றைய நிலை, சழூகச் சூழல் என கவிதை விவரிக்கும் ஒவ்வொரு வரியிலும் ஆழ்ந்த அரசியல் இழந்தது ஏமாந்தது பிரிந்து கிடப்பது என விவாதம் நீண்டு கொண்டே போகும். கல்வியையும் செல்வத்தையும் பறித்தது மட்டுமின்றி நம் முன்னோரை பார்த்து சிரித்தும் சென்றிருக்கிறான். யாரவன்? விடை காணுங்கள் கவிஞரின் கோபம் உங்களுக்குள்ளும் வரும். வீரத்தில் யார் பெரியவர் என சண்டை போட்டுக் கொண்டிருந்தோம். கவிஞர் எங்கே? யார்? எதற்காக? என்று விவரிக்கவில்லை சற்று யோசித்து பார்த்தால் புரியும் நாம் எதை நோக்கி போயிருக்க வேண்டும் எதை நோக்கி போய்க் கொண்டிருந்தோம் என்று. பின்பு வந்த மூவர் இதுதான் கவிதையின் முக்கியமான வரி யார் அந்த மூவர் இன விடுதலை வர்க்க விடுதலை சாதிய விடுதலை என நம்மை வழி நடத்திய அந்த மூவர் யாரென்று நான் சொல்லப்போவதில்லை தேடுங்கள் அறிந்து கொள்ளுங்கள். பின்பு வந்த மூவர் இந்த ஒற்றை வரி போதும் கவிஞர் எத்தனை வருட வாசிப்பு அனுபவம் கொண்டவர் என்று உணர இழந்த இரண்டில் கொஞ்சம் எட்டிப் பிடித்தோம். மூவர் வந்த பிறகு இந்தியச்சமூகம் அடைந்த பயனை இத்தனை இரத்தினச் சுருக்கமாக வேறு யாரும் சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை. இதற்காகவே தனிப் பெரும் பாராட்டுக்கள் கவிஞருக்கு. இவ்வளவு பட்ட பின்பும் நாம் எங்கே நின்று கொண்டிருக்கிறோம் தோழனே என்று கூறி நான்கு புள்ளிகள் வைத்திருப்பார் கவிஞர் தோழனே.... வார்த்தைகளால் விவரிக்க முடியாத கோபத்தை அக்கறையை ஆற்றாமை தவிப்பை தோழனே...... என்றிருப்பார் புள்ளிகளால் கூட கவிதை சொல்லி இருக்கிறார் கவிஞர். இது சாதாரண கவிதை இல்லை ஒரு யுகத்தின் வரலாறு பேசும் கவிதை அனைவரும் வாசித்து யோசிக்க வேண்டிய கவிதை.
MADHAVAN S 14-04-2025 04:06 am