சுவடுகள் அற்ற பயணம் மரணம்
ஒரு படைப்பாளியின் அடிப்படைப் பண்புகளில் ஒன்று தன்னைச் சுற்றியுள்ள உலகை உற்று கவனித்தல், அதன் இருப்பை உள்வாங்குதல், அதனை தன் வயப்படுத்துதல், தனது மொழிக்குள் அல்லது தனது படைப்புக் கருவிக்குள் அதனைக் கொண்டு வருதல்.
அதனை வெளிப்படுத்தும் போது, தான் உற்று கவனித்த எதார்த்தம் அவரது படைப்பு மொழி வழியாக புதிய எதார்த்தமாக வெளிப்படுதல், இதுதான் படைப்பு மொழியின் அசாத்தியமான சாதனை. அதுதான் இந்த உலகை அழகுறச் செய்வதும் அதலை உள்வாங்கும் அழகியல் அறிதலை வெகு மக்களின் ரசனையாகக் கட்டமைப்பதும். அந்த அழகியல் அறவழிப்பட்டதாக மனித உயிர்ப்பை பொருள் கொண்டதாக மாற்றும் போது அது உயர்ந்த இலக்கிய நிலையைப் பெறுகிறது. அதைத்தான் செவ்வியல் இலக்கியங்கள் என்கிறோம். இந்தகைய இலக்கிய ஆக்கங்கள் உருவாகும் ஒரு மொழித் தளத்தில் பயிலும் சமகாலப் படைப்பாளிகள் தங்கள் பங்கிற்கான இந்த நுண் கவனங்களை தங்கள் படைப்புகளில் வெளிப்படுத்தி அதை சமூகத்தில் பொது அனுபவத் தளத்திற்கு மாற்றுகிறார்கள். இந்த முயற்சி தொடர்ந்து நிகழ்வதே ஒரு சமூகத்தின் தொடர்ச்சிக்கான தேவையாகிறது.
அத்தொடர்ச்சிக்கான தற்கால முயற்சிகளில் ஒன்றாகவே எண்ணற்ற படைப்பிலக்கியங்கள் உலக அளவில் வெளிப்படுகின்றன.
Be the first to rate this book.