கவிதை என்பது அதிகாரத்தின் சாட்சி. அதிகாரமென்பது பலருக்கும் பலவற்றை சரியாகப் பகிர்ந்தளிப்பதே அது ஒரு வேலைப்பாடேத் தவிர உயர்வுருவிற்சி அல்ல. தமிழறிந்த நல்ல அதிகாரிகள் வள்ளுவனும் இளங்கோவும் பாரதியும் அவன்தாசனும் அதையடுத்த ப்ரமிளும் கவிதைக்கு பாசிசம் வராது அதற்கு பாட்டாளி வர்க்கம் தெரியும். கவிதைக்கு பால் பேதம் உயிர் பேதம் கிடையாது அதற்கு எல்லாமே ஜீவராசிகள் எனத் தெரியும். அது வாடிய பயிரைக் கண்டது வாடும் மரத்தை அக்காள் என்று கொண்டாடும் கவிதைக்கு காதல் தெரியும். காமம் தெரியும். ஊடல் தெரியும் உயிருற்றின் தேவை தெரியும். கள்ளமறியும் கபடமறியும் நாடகமாடும் நயவஞ்சகர்களைத் தெரியும் குறிப்பாக மொழித் துரோகிகளைத் தெரியும், இனத்துரோகிகளையும் தெரியும். இப்படி பட்ட கவிதை விஜியின் கையிருப்பில் பிழையாக இல்லை. ஆனால் அது பிழைதான் என்றால் அதுதான் அவரின் கையிருப்பு.
-ப்ரியம்
Be the first to rate this book.