இருபதாம் நூற்றாண்டு என்று சரித்திரம் கூறுகிற இந்தக் காலம் தோன்றும் முன்னரே, விடாமுயற்சியும் பிடிவாதமும் உள்ள கல்வி அறிவு பெறவேண்டும் என்கிற லக்ஷியமும் படைத்த இந்தச் சிறுமியைப்பற்றி அமெரிக்கா முழுவதும் அறிந்து கொண்டு விட்டது. ஹெலன் செல்லரை பற்றிய தகவல்களும், அவன் கண்ணுள்ள காதுள்ள மக்களுக்குச் சமமாக வாழ்க்கை நடத்தி வந்ததும், தன்னைப் போலப் பாதிக்கப்பட்டவர்களுக்காக அவள் செய்த முயற்சிகளும் நன்மைகளும் இந்த ஐம்பத்தி ஐந்து வருஷங்களில் உலகப் பிரசித்தமாகிவிட்டன அமெரிக்காவில் மட்டும்தான் ஹெலன் கெல்லர் போன்ற அதிசயங்கள் நடப்பது சாத்தியமென்பதில்லை. உலகில் எங்கும் சாத்தியமாக வேண்டும் என்பதே தெஹலன் கெல்லரின் நோக்கம். இதற்காக அவர் நினைவு தெரிந்த நாட்களாகப் பாடுபட்டு வந்திருக்கிறார்.என் கதை" என்ற தன்னுடைய சுயசரிதத்தில் ஆதி நாட்களின் போராட்டங்களை விவரித்திருக்கிறார். உலகத்தின் சிறந்த சுயசரிதங்களில் ஒன்றாகப் பாராட்டப் படவேண்டிய இந்த நூலை க.நா.சுப்ரமணியம் மொழி பெயர்த்துள்ளார்.
Be the first to rate this book.