தபசி, நிறைய எழுதுபவர்; நிறைவாக எழுதுபவர். கடந்த முப்பது ஆண்டுகளாக கவிதையில் மட்டுமே இயங்கி வரும் அவர் சமீப காலமாக நவீன தமிழ்க் கவிதையை நேர்த்தியடனும், வசீகரத்துடனும், பாசாங்கின்றியும் எழுதி வருகிறார். உலகியல் தளத்தில் இயங்குவதாகத் தோன்றும் அவர் கவிதைகள் பலவும் உண்மையில் நம்மை உயர் தளத்திற்கு அழைத்துச் செல்லும் வல்லமை பெற்றவையே. தன் அனுபவத்தை பேரனுபவமாக மாற்றிவிடும் ரசவாதம் இயல்பிலேயே அவருக்குக் கை கூடியுள்ளது. You must have a certain amount of maturity to write poetry என்கிறார் அமெரிக்க பெண் கவிஞர் எரிக்கா ஜாங். தபசியிடம் இந்த முதிர்ச்சி நிறையவே உள்ளது. நவீன கவிதையின் செழுமையை கண்டுகொள்ள விழைபவர்களுக்கு தபசியின் கவிதைகள் புதையல். அள்ளிக் கொள்ள தடையேதுமில்லை.
-கரிகாலன்
Be the first to rate this book.