இந்த நூலின் இன்னொரு சிறப்பு, அன்றாட பாட்டுக்கு அல்லாடுபவர்களின் கஷ்ட, நஷ்டங்களுக்குக் காரணமானதாறுமாறான பொருளாதார ஏற்ற இறக்கங்களை புள்ளி விவரங்களோடு பதிவு செய்திருப்பது. உழைப்பு முயற்சி எல்லாம் எப்போதும்வழங்குவது தான். ஆனால் கூலி. மூலப்பொருள்கள் விலையேற்றம்போன்றவை தான் வாழ்க்கையின் இன்னல்களுக்குக் காரணம்என்று சொல்லாமல் சொல்லி உள்ள திறன் பாராட்டத்தக்கது. அந்த வகையில் பொருளாதார வல்லுநர்கள் பயன்படுத்தத்தக்க புள்ளி விவரங்கள் வாசகனை அசரவைக்கும். இந்த நூல் போலபாரதி வாழ்க்கையை எழுதிய அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ.ரா என்கிற வ.ராமசாமி படைத்துள்ள ஏழை மக்கள் இப்படிப்பட்ட அவல வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் தான் பாயாசம் விற்பவர், மூர் மார்க்கெட்டில் வித்தை காட்டுபவர், சென்னை குதிரைவண்டிக்காரர். ரிக்க்ஷாகாரர் என உயிர் துடிப்புடன் கோட்டு சித்திரமாய்வழங்கியுள்ளார்.
Be the first to rate this book.