ஆரம்ப மாணவர்களுக்கு ஒரு எளிய அணுகுமுறை...
*231072 ஐ 110649-ஆல் பெருக்கி, ஒரே வரியில் விடையை பெற முடியுமா?
*இரண்டே வினாடியில் 262144 அல்லது 704969 போன்ற எண்களின் மும்மடி மூலம் கண்டறிய முடியுமா?
*ஒருவர் சொல்லாமலேயே. அவர் பிறந்த தேதியை நீங்கள் சொல்ல முடியுமா?
*ஒருவரிடம் எத்தனை பணமிருக்கிறது என்பதை அவர் சொல்லாமலேயே உங்களால் சொல்ல முடியுமா?
*கேள்விக்கு விடை கண்டறியாமலேயே இறுதி விடையை உறுதி செய்ய முடியுமா?
*மனக் கணக்காகவே இருமடிப் பெருக்கம், மும்மடிப் பெருக்கம், அவற்றின் மூலங்கள் போன்ற கேள்விகளுக்கு விடைகாண முடியுமா?
இன்னமும் முடியும் இந்த நூலில் கூறப்பட்டுள்ள உத்திகளால் வணிகர்களும் வல்லுநர்களும் மாணவர்களும் பயன் அடைகிறார்கள். உலகெங்கும் பல லட்சம் மாணவர்களின், எண்களைப் பற்றிய அச்சத்தைப் போக்குவதற்கும், எண்கள் தொடர்புள்ள பாடங்களில் மதிப்பெண்களை மேம்படுத்துவதற்கும் வேதவழி கணிதத்தின் வழிமுறைகள் உதவியுள்ளன. முதனிலை, உயர்நிலை பள்ளி மாணவர்களும் வேதவழி கணிதத்தின் அணுகுமுறையைப் பரபரப்பாகப் பார்க்கிறார்கள். எம்.பி.ஏ., எம்.சி.ஏ., சி.ஈ.டி. யூ.பி.எஸ்.சி. ஜீஆர்ஈ.. ஜீமேட் போன்ற நுழைவுத் தேர்வுகளில் வெற்றிபெற, வேதவழி கணிதம் உதவியது என்று எழுதியவர்கள் உறுதிபடக் கூறுகிறார்கள்.
நூலின் முக்கிய அம்சங்கள்:
*கணக்கிடலின் கடினத்தைப் பொறுத்து, நூல் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது -முதனிலை, இடைநிலை, மேநிலை.
*எளிதாகப் புரிந்து கொள்வதற்குத் தேவையான விளக்கம் தரும் அளவுக்கு வினாக்கள் செய்து காட்டப்பட்டுள்ளன.
*எல்லா அத்தியாயத்தின் முடிவிலும், பயிற்சி வினாக்கள் தரப்பட்டுள்ளன.
*அதிக வடிவங்களும். படங்களும் புரிதலுக்கு உதவியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
Be the first to rate this book.