மக்கள் சக்தியே, மாநிலத்தில் மகத்தான சக்தி என்பதை எடுத்துக்காட்டி விட்டது எகிப்திய எழுச்சி! மக்கள் சக்தியை மதபோதகர்களின் பாவபுண்ணிய போதனைகளாலும், ஏழை பணக்காரன் என்ற வேற்றுமையினாலும், படைபலத்தாலும், அதிகார ஆட்சிப் பலத்தினாலும் அடக்கியாள நினைப்பது நடவாது என்பதை உலகுக்கு முரசறைந்து ஒலித்துக் காட்டிவிட்டது எகிப்திய எழுச்சி!
புரட்சி! மக்கள் புரட்சி! என்றால், ஆயுதமேந்த வேண்டும். ஆட்சியாளர்களைத் தாக்கவேண்டும், ஆதிக்கக்காரர்களை வாட்டி வதைக்க வேண்டும், இரத்த ஆறு பெருக்கெடுத்தோடவேண்டும் என்றெல்லாம் எண்ணி நடந்திடும் சிலர் மக்கள் சக்தியைத் திரட்டி வருவதைக் கேலி செய்கிறது எகிப்திய எழுச்சி! மக்களின் ஒருமனப்பட்ட, பண்பட்ட சக்தி திரண்டு விட்டால் இரத்தச்சேதமின்றி எதையும் சாதித்துவிட முடியும் என்பதை எகிப்திய எழுச்சி மிகமிகச் சாதாணமான, சமாதான முறையில் மன்னனை முடி துறந்து வெளியேறச் செய்ததன் மூலம் உலக மக்கள் தெரிந்து நடந்திட அறிவுறுத்துகிறது.
-புத்தகத்திலிருந்து
Be the first to rate this book.