க.குணராசா அவர்கள் எழுதியுள்ள "ஈழத்தமிழர் சுருக்க வரலாறு" என்ற இந்நூல், குறுகத் தரித்த குறள் போல், ஒரு பெரும் வரலாற்றை - சாரம் குன்றாமல் குறுக்கிக் கொடுத் துள்ளது.
மனித குலம் தோன்றிய காலத்தில் தொடங்கி - குமரிக் கண்டம் பற்றிப் பேசி, தமிழீழ உருவாக்கம் குறித்து வரலாற்றுச் செய்திகளைக் கூறி, சிங்களப் பேரினவாத ஆக்கிரமிப்பு, தமிழீழ விடுதலைப் போர் தமிழினப் படுகொலைகள் -அது பற்றி விசாரித்த செர்மன் நிரந்தரத் தீர்ப்பாயத் தீர்ப்பு (2015). நாடு கடந்த தமிழீழ அரசின் செயல்பாடுகள் என அண்மைக் காலம் வரை செய்திகளைத் தொகுத்துக் கொடுத்துள்ளது இந்நூல்!
இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களும், பல்லாயிரம் விடுதலைப் புலிகளும், சிங்கள ஓநாய்களால் இனப்படு கொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பிறகு, இலங்கை ஆட்சியாளர்களை படையாட்களை இனப்படு கொலைக் குற்றவாளிகளாகத் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பன்னாட்டுச் சமூகத்தை நோக்கி வைத்தனர். உலகெங்கும் உள்ள மனித உரிமை அமைப்புகள் அக் கோரிக்கையை ஆதரித்தன. இவற்றையெல்லாம் இந்நூல் தொகுத்து வழங்குகிறது.
Be the first to rate this book.