சுரேஷ் பரதனின் கவிதைகள் மாற்றங்களை அவதானித்துக் கேள்விகளை எழுப்புவனவாகவும் கிடைக்கும் பதில்களில் புதிய திருப்பம் புலப்படுவதைப் புரிந்துகொள்ள யத்தனிப்பவையாகவும் இருக்கின்றன. இவரின் பாடுபொருள்கள் பலவும் புதிய தளங்களில் புதிய மொழிதலில் இயங்குகின்றன.
பழைய தொன்மங்களைச் சமகாலத்தோடு பொருத்திப் பார்ப்பதும் மீள் கவனத்துக்குட்படுத்துவதும் முக்கியமான அம்சமாக உள்ளது. கவிமனத்தின் குரல் அகத்தின் குரலாய், உரையாடலின் குரலாய், கனவின் குரலாய், ஞாபகத்தின் குரலாய், பறவைகளின் குரலாய்க் கேட்டவண்ணம் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
-கவிஞர் தமிழ்மணவாளன்
Be the first to rate this book.