பேராசிரியர் ம.பெ.சீக்கு வயது எண்பது நிறைவுறும் வேளையில் வெளிவரும் இந்நூல் அவர் ஆற்றிய பணிகளுக்கும் அவரது வைணவத் தமிழ்ப் புலமைக்கும் ஒரு சான்றாவணம்.
நாலாயிரத்தைத் தொகுத்தவர் நாதமுனிகள் எனில் அதற்கு ஒரு செம்பதிப்பை ஆக்கித் தந்தவர் ம.பெ.சீ. என்கிறார் 'வைணவ உரைவளம் தந்த பேராசிரியர் தெ.ஞானசுந்தரம். அந்தச் செம்பதிப்பின் பதிப்புரை'யைத் திருக்கோவலூர்த் திருக்கோயில் கோபுர உயரத்திற்கு உயர்த்திப் பேசுகிறார் புதிய உரைநடை தந்த பேராசிரியர் எழில் முதல்வன்.
தொ.பவுக்கு இவர், 'நம்பிமூத்தபிரான்' எனில் தமிழறிஞர் நாச் சொல்லும் இவரை 'வைணவ வாரணம்' என்று.
ஈரத்தமிழ் மைதொட்டு இவர் எழுதிய 'கம்பனும் ஆழ்வார்களும் என்னும் நூலில் கம்பன் நம் கைப்பொருளாகும் விந்தை நிகழ்கிறது. மற்ற நூல்களைப் பொறுத்தவரை பயின்றோர்தம் மதிப்பீடுகள் வண்டாடப் பூ மலர்வதுபோல் மலர்ந்து வாசகர் மனம் கவரும் கட்டுரைத் தொகுப்பு இது.
Be the first to rate this book.