எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி, அதன் அதிக நச்சுத்தன்மை காரணமாக உலகளவில் தடைசெய்யப்பட்ட ஒன்றாகும்; இது மனிதர்கள் மற்றும் விலங்குகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது, குறிப்பாக கே ரளாவின் காசர்கோடு பகுதியில், பிறப்பு குறைபாடுகள் (ஊனம், மனநலம் பாதிப்பு), நரம்பியல் பிரச்சனைைகள் (வலிப்பு), புற்றுநோய், தோல்
பிரச்சனைகள் மற்றும் இனப்பெருக்க பாதிப்புகளை ஏற்படுத்தி, பலரின் வாழ்க்கையைப் பாதித்துள்ளது. அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவரின் நீங்கா நினைவுகளாக இந்த ஈன்றெடுத்த வேதனை அமைந்துள்ளது.
மலையாள மொழியில் அருணி சந்திரன் தன்னுடைய நீங்காத நினைவுகளாகப் பதிவு செய்தவற்றைத் தமிழில் மொழி பெயர்த்தவர் நெய்வேலி மு.சுப்பிரமணி. எட்டு வயது குழந்தையிலிருந்து இந்த நினைவுகள் துவங்குகிறது. குழந்தைப் பருவ இன்பமான நினைவுகள், மழைக்கால நினைவுகள், வளர்ந்த பின் பருவ வயது நினைவுகள், தந்தை கடந்து வந்த பாதையைப் பற்றிய நினைைவுகள், எண்டோசல்பான் என்னும் பெருங்கொடுமை என்றவாறு 14 சிறு சிறு தலைப்புகளில் இந்த நீங்கா நினைவுகள் அமைந்துள்ளன.
Be the first to rate this book.