சாவர்க்கர் குறித்த முதல் புத்தகம் 1926ல் வெளிவந்தது. ‘லைஃப் ஆஃப் பாரிஸ்டர் சாவர்க்கர்’ என்ற அந்த புத்தகத்தை சித்திரகுப்தா என்பவர் எழுதியிருந்தார். சாவர்க்கரின் வீரதீர பராக்கிரம செயல்கள் அதில் விரிவாக விவரிக்கப்பட்டிருந்தன. இந்த புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு 1987ல் ‘வீர சாவர்க்கர்’ பிரகாரன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. (சாவர்க்கரின் எழுத்துகளை வெளியிடும் பதிப்பகம் இது). அதில் முன்னுரை எழுதிய ரவீந்திர ராம்தாஸ் என்பவர் இந்த புத்தகத்தை எழுதிய சித்திரகுப்தா வேறு யாருமல்ல, அது சாவர்க்கர்தான் என்ற உண்மையை வெளிப்படுத்தினார்.
Be the first to rate this book.