"தங்கள் தாத்தா காலத்தில், எத்தனை பேர் பள்ளிப்படிப்பு முடித்தவர்களாக-பட்டதாரிகளாக இருந்தார்கள் என்பதையும், இன்று ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை பேர் பட்டதாரிகளாக, டாக்டர்களாக, இன்ஜினியர்களாக, வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொண்டாலே. ஒரு நூற்றாண்டு கால திராவிட இயக்கத்தின் சாதனைகளை அனைவரும் புரிந்து கொள்ளலாம்.
தாத்தாவின் தாத்தா யார் என்று அறியாத தலைமுறையினருக்கு, அவரவர் குடும்பத்தின் தாத்தா காலத்தில், நம் இனத்தில் வாழ்ந்த கொள்கைத் தாத்தாக்கள் எப்படி இந்த இயக்கத்தை உருவாக்கி, வளர்த்து, போராடி, இன்று நாம் காண்கின்ற தமிழ்நாடு அமைந்திட உழைத்தார்கள் என்பதையும் அதனால் ஒவ்வொரு குடும்பத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், வளர்ச்சிகளையும் பேசுகிறது 'திராவிடத்தால் வாழ்கிறோம்” என்கிற படக்கதை வடிவிலான வரலாறு.
Be the first to rate this book.