ஆரிய திராவிட பிரிவினைவாத அரசியலின் பின்னணியில் மூன்று ஆளுமை மிக்க காந்த முகங்கள் உள்ளன....
திராவிட சித்தாந்தம் எனப்படும் தனித்துவமான அரசியல் கலாச்சார வரலாற்றில் நீண்ட காலம் பயணித்த திருமுகங்களாக பெரியார். அண்ணா கலைஞர் ஆகியோர் போற்றப்படுகிறார்கள்...
மதவாதிகளி பலரையும் கொன்றுகுவித்த பின்னர் நான் லெனினால் பகுத்தறிவு ஆட்சியை உண்டாக்க முடிந்தது. ஆனால் பெரியார் வழியில் அண்ணா ஒருவரால் தான் ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல் பகுத்தறிவு ஆட்சியை மக்களின் பேராதரவுடன் நிறுவ முடிந்தது..!
அண்ணாவிடமிருந்து இரவலாக அவரின் இதயம் பெற்ற கலைஞரால் பெரியார், அண்ணர் கனவுகளை பரிபூரணமாக நிறைவேற்ற முடிந்தது...!
1967 இல் இருந்து பெரியார் மறைந்த 1973 வரை அண்ணாவின் ஆட்ரி கலைஞரின் ஆட்சி திமுக என்ற அமைப்பு ஆகியவற்றுக்கு காவல் அரணாகவே பெரியார் இயங்கினார்...!
தேசிய இன எழுச்சியின் வடிவமாக அமைந்த மொழி உரிமைப் போராட்டத்தின் ஊடாக வடவர் எதிர்ப்பை வலுவாக தமிழ்நாட்டில் வேரூன்ற செய்த கருத்தியல் வழிகாட்டி பெரியா...!
திராவிட நாடு சித்தாந்தத்தை கனவு கண்ட இந்த மாவீரர்கள் தென் மாநிலங்களை பாரதத்தின் மற்ற பகுதியிலிருந்து பிளவு படுத்திய கூர்ங்கத்தியாக இருந்துள்ளனர் என்பது ஆரியரின் மிரட்சியான குற்றச்சாட்டாக இன்றளவும் உள்ளது..!
தமிழ்நாட்டில் சமூக அரசியல் நிலப்பரப்பில் முதல்வரின் அழிக்க முடியாத உயிர்த்தடிப்பாக இந்த மூன்று ஆளுமை மிக்க முகங்களும் தடம் பதித்துள்ளதை வரலாறு மறுக்கவில்லை என்பதை இந்நூல் அறுதியிட்டுக் கூறுகிறது.
Be the first to rate this book.