திராவிடச் சுவடுகள் என்ற இந்த அருமையான தொகுப்பு, சிறப்பும் சிந்தனைக்கு விருந்துமான ஒரு நூலாக இருக்கிறது. இத்தொகுப்பு அறியாமை இருட்டை விலக்கி, அறிவு வெளிச்சத்தை நிச்சயம் பாய்ச்சும்.
'திராவிடச் சுவடுகள்' நல்ல அருமையான ஆவணம்: சுவடுகளின்மீது உலகம் நடந்துதீர வேண்டியது காலத்தின் கட்டாயம்!
கி. வீரமணி
தலைவர். திராவிடர் கழகம்
பரந்துபட்ட பார்வை கொண்ட இந்தத் தொகுப்பு, மானுடம் பயனுறும் நோக்கில் மலர்ந்திருக்கிறது. தமிழர்கள் ஒவ்வொருவரின் தலைக் குள்ளும் தலைமாட்டிலும் இருக்க வேண்டிய கை விளக்கு இது. இதில், நம் கடந்தகால இருளின் அடர்த்தியை அளந்து பார்ப்பதோடு, எதிர்காலத் துக்கான வெளிச்சத்தையும் பெற்றுக் கொள்ளலாம்.
ஆரூர் தமிழ்நாடன்
நக்கீரன் முதன்மைத் துணை ஆசிரியர்
பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை (15 செப்டம்பர் 1909 -3 பிப்ரவரி 1969), திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனர் மற்றும் முதல் பொதுச் செயலாளர். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது மாநிலக் கட்சித் தலைவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார். பெரியாரின் சீடர், சமூக மாறுதலை தன் எழுத்தின் மூலம் முன்னெடுத்துச் சென்றவர். எழுத்து, பேச்சு, நாடகம், புதினம், திரைப்படம் என பல துறைகளில் சாதனை செய்தவர்.
Be the first to rate this book.