திராவிட மாடல் அரசின் சிறப்புத்திட்டங்கள் என்கின்ற தலைப்பில் நான் எழுதும் இந்நூல் திமுக அரசு சார்ந்து நான் எழுதும் 3வது நூல் என்பதில் மிக்க பெருமிதமும், மிக்க மகிழ்ச்சியும் அடைகிறேன். ஒரு சில அரசுகளின் திட்டங்கள் நீண்டகால அடிப்படையில் இருக்கும். ஒரு சில அரசுகளின் திட்டங்கள் குறுகிய கால அடிப்படையில் இருக்கும். ஆனால் திமுக அரசு மட்டும் தான் நீண்ட காலத் திட்டங்கள், குறுகிய காலத் திட்டங்கள் ஆகிய இரண்டுக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுத்து ஆட்சிபுரிந்து வருகிறது. இது என்னுடைய வலுவான, ஆணித்தரமான கருத்தாகும். அதோடு, மக்களைப் பாதிக்கும் எந்தவொரு விசயமாக இருந்தாலும், அதனைக் களையும் நோக்கில், அதிரடி ஆக்சனில் இறங்குவதில் திமுக அரசுக்கு ஈடு இணையில்லை. இந்நூல் சமூக நலன், பொருளாதாரம், வாழ்வாதாரம், தொழில், கல்வி, ஆன்மீகம், வேலைவாய்ப்பு, மருத்துவம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் திமுக அரசு வகுத்துள்ள சிறப்புத்திட்டங்களை வாசகர்களின் பார்வைக்காக இங்கே தொகுத்து வழங்கியுள்ளேன்.
Be the first to rate this book.