திராவிடர் என்ற தமது நூலுக்கு முகவுரை எழுதிக் கொடுக்குமாறு ஸ்ரீ.தம்பிமுத்து என்னைக் கேட்டபொழுது அவருடைய கோரிக்கையைச் சந்தோஷத்துடன் நான் ஏற்றுக் கொண்டேன். தமிழ் நாடுகளின் சரித்திரத்தையும், தமிழர்களது நாகரீகத்தையும் இச்சிறு நூலில் இலகுவில் படிக்கத்தகுந்த சுவாரஸ்யமான நடையில் அவர் எழுதி முடித்திருக்கிறார்.
அவர் விரிவாகப் படித்துத் தெளிவாகவும், திட்டமாகவும் எழுதுகிறார். அவர் தமக்குக் கிட்டிய ஆகச் சிறந்த- அறிஞர்களின் நூல்களைப் பின்பற்ற அழகான முறையில் ஆராய்ச்சிகளை ஆங்காங்கே பயன்படுத்தி எழுதியுள்ளார். புத்தகத்தில் அவர் கொடுத்திருக் கும் படங்கள் குறைவாயிருந்தபொழுதிலும் நன்கு தெரிவு செய்யப்பட்டவை. நமது சரித்திரத்தின் கலாசாரத்துறையில் போதிய கவனமும் செலுத்தப்பட்டிருக்கிறது.
தேச சரித்திரம் விஞ்ஞானத்தைப்போல அதன் இலட்சியத் தில் ஒருக்காலும் பரிபூரணத்துவம் பெறமுடியாது. எனவே, ஸ்ரீ.தம்பிமுத்துவின் நூல் ஓரளவு அவருடைய மனோபாவத்தைப் பிரதிபலிப்பதாயிருப்பது இயல்பு. வாசகர்கள் சுலபமாகத் தங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாத அபிப்பிராயங்களையும் மதிப்பீடுகளையும் புத்தகத்தினுடே சில இடங்களில் காண நேரிடலாம். ஆயினும் இப்புத்தகத்தைப் படிக்கும் ஒவ்வொரு வாசகநேயரும், (இதைப் படிப்பவர்கள் அநேகர் இருப்பார்க ளென்று நம்புகிறேன்) அவர்கள் ஒவ்வொருவரும் பொது வாசகருக்கு தென் இந்தியாவின் சரித்திரச் சுருக்கத்தைத் திரட்டிக்கொடுக்கும் கடினமான சேவையை இவ்வாசிரியர் மிகுந்த திறமையுடன் நிறைவேற்றி யுள்ளாரென்பதை ஒப்புக் கொள்ளுவது நிச்சயம்.
Be the first to rate this book.