இந்த ஏடு
1900 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் 2095ஆம் ஆண்டின் இறுதிவரையிலான தமிழ்நாட்டின் அனைத்து நிகழ்வுகளையும் தொட்டும் சீர்தூக்கிப் பார்த்தும். அதன் பின்னணியையும் அதில் ஏற்பட்ட மாற்றங்களையும் சொல்கிறது.
திராவிட அரசியலின் தோற்றம் முதல் இன்று வரை ஆராய்கிறது. திராவிடக் கொள்கைகள் ஆட்சியின் தொடர்ந்து அரசாணைகள் ஆவதைச் சொல்கிறது.
ஒடுக்கப்பட்ட நாம் எந்த வகையில் விழிப்பு பெற்றோம். ஓடுக்கியவர்களை மிஞ்சினோம், அவர்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு எந்த வகையில் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்கிறது.
சாதி, மதத்தால் பிளவுபடுத்தப்பட்ட தமிழினத்தை தமிழர் என்ற ஒற்றுமையால் திராவிட இயக்கம் ஒன்றிணைத்ததைப் பட்டியலிடுகிறது.
திராவிட கொள்கைகளை மேலும் மேலும் வளர்க்கச் சொல்கிறது. அடிப்படைக் கொள்கைகளைக் சொல்கிறது.
திராவிட அரசியல், ஆட்சியில் அரசு இயலாக எந்நாளும் தொடர வேண்டும் என்ற ஆசையால் உருவாக்கப்பட்டது.
திராவிடத்தால் எல்லாம் இயலும் என்கிறது!
Be the first to rate this book.