பாரத் தமிழ் நல்ல இலக்கிய வாசகராக எனக்கு அறிமுகம் ஆனார். கவிதை, சிறுகதை எழுதுபவர் என்பதைப் பிறகு அறிந்தேன். இத்தொகுப்பில் உள்ள கதைகளை வாசித்தது நல்ல அனுபவம். சாதாரண மனிதர்களின் வாழ்விலிருந்து அசாதாரணக் கணங்களைத் தேர்வு செய்து எழுதிய கதைகள் இவை.
திருமணம் செய்து கைவிட்டுப் போன கணவன் சாவைப் புறக்கணிக்கும் பெண், பிரிந்த காதலரின் ரயில் சந்திப்பு, நண்பர்களால் மனதில் வாழும் ஊர் என விரியும் கதையுலகம், ஒரு நாயின் கதையும் இருக்கிறது. அம்பேத்கர், பெரியார். காந்தி முதலிய தலைவர்கள் தொடர்பான சம்பலங்கள் இயல்பாகக் கதைகளுக்குள் வருகின்றன. இவையெல்லாம் தவிர்க்க வேண்டியவை என்று எப்படியோ நவீன இலக்கிய மனதுள் பதிந்து விட்ட எண்ணத்தை எழுத்தின் போக்கில் கடந்து சென்றிருக்கிறார்.
கதைக்களம் குறைந்த சொற்களில் உருவாகிவிடுகிறது. வடார்க்காட்டு வட்டார மொழி சரளமாக ஓடுகிறது. எல்லா வகையிலும் நம்பிக்கை தரும் பாரத் தமிழின் எழுத்து அவரிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்க வைக்கிறது.
-பெருமாள்முருகன்
Be the first to rate this book.