சசிட்னி லுமெட் கூறுவது போல, எதிர்பாராத பனிப்பொழிவைக்கூட ஒரு மகத்தான காட்சியாக மாற்றும் சாமர்த்தியம் தான் இயக்குநரின் தனிச் சிறப்பு.
இந்த நூல், சினிமாவின் 'ஆச்சூர் கோட்பாடு' (Auteur Theory) முதல், பெரிய ஸ்டுடியோக்களால் பணிக்கு அமர்த்தப்படும் இயக்குனர்கள் வரை உள்ள வித்தியாசங்களை அலசுகிறது. ஒரு இயக்குநரின் தனிப்பட்ட பாணி (Style) எப்படி அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களம், ஒளிப்பதிவு (Cinematography), படத்தொகுப்பு (Editing), மற்றும் காட்சி அமைப்பு (Setting) ஆகியவற்றில் அழியாத முத்திரையைப் பதிக்கின்றன என்பதை விவரிக்கிறது.
ஒரு திரைப்படத்தை அணுகுவதில், மார்ட்டின் ஸ்கோர்செசிக்கும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குக்கும் இடையிலான கலை வேறுபாடுகளைத் தெரிந்துகொள்வது முதல், ஒரு இயக்குநரின் ஆழ்மனக் கருத்துக்கள் எப்படி, அவர் அறியாமலேயே, அவர் படைப்புகளில் வெளிப்படுகின்றன என்பதை இப்புத்தகம் வழி நீங்கள் அறியலாம்.
ஒரு திரைப்படத்தின் ஆன்மா அதன் இயக்குநரின் பார்வையில் தான் உள்ளது. அந்தக் கலையின் அடித்தளத்தை இந்தப் புத்தகத்தின் வழி ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள்!
Be the first to rate this book.