திண்டுக்கல் என்றவுடன் உங்கள் நினைவுக்கு என்ன வரும்..?
பூட்டு, பிரியாணி, தோல் தொழில், கொடைக்கானல், சிறுமலை... என்னவெல்லாம் உங்கள் நினைவுக்கு வந்தாலும், இன்னும் ஆயிரமாயிரம் அழகான பேசு பொருட்கள் மிச்சம் இருக்கும்.
தமிழக வரலாற்றில் அதிகமாகப் பேச மறந்துபோன மண் திண்டுக்கல்.
ஆயிரம் வரலாற்றுப் புதையல்களை தன்னுள் சுமந்து, தோண்டியெடுக்கக் காத்திருக்கும் மலைக்கோட்டை வளர்த் தெடுத்த நகரம் திண்டுக்கல்...
வரலாற்றுக்குள் இதுவரை வந்திருக்கும் திண்டுக்கல்லின் சில பக்கங்களில்...அழகான சில நினைவுகளைச் சித்திரமாய்த் தீட்டும் முயற்சிதான் இந்தப் புத்தகம்.
'யாதும் நம் ஊரே..." இந்தப் புத்தகம் வாசித்து முடிக்கையில் நீங்கள் திண்டுக்கல் வாசியாகியிருப்பீர்கள்... உங்கள் பால்யத்தின் நினைவுகளில் தவழ்ந்து பார்த்து இருப்பீர்கள்...
Be the first to rate this book.