"மிருதங்கமென்றால் பழனி: பழனியென்றால் மிருதங்கம்” - செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர்.
வரலாற்றின் பக்கங்களில் பதிவாகாமலே போன இந்திய இசை மேதைகள் எத்தனையோ பேர்! உலகின் எந்த உயரிய இசைமேதைக்கும் நிகரானவர் பழனி சுப்ரமணிய பிள்ளை. அவர் மறைந்து 50 வருடங்கள் கழித்து வெளிவரும் அவருடைய இந்த வாழ்க்கை வரலாறு லலிதா ராமின் கடும் உழைப்பாலும், நேரடி ஆய்வுகளாலும் உருவாகியுள்ளது. இப்புத்தகத்தின் சில பகுதிகள் கட்டுரைகளாக வந்தபோதே, பல தேர்ந்த தமிழ் எழுத்தாளர்களாலும், வாசகர்களாலும் விரும்பிப் படிக்கப்பட்டவை. பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமல்லாமல், மிருதங்கத்தின் வரலாறு, புதுக்கோட்டை பரம்பரையின் பிற மிருதங்க வித்வான்களின் பங்களிப்பு போன்ற பல்வேறு விஷயங்களையும் பதிவு செய்கிறது இப்புத்தகம்,
Be the first to rate this book.