தீவிரத்தன்மை நிரம்பிய காட்சிப்படுத்துதல்கள் அதாவது மனக்கண்ணால் பார்ப்பது மனித மரபணுவிலும் மாற்றத்தை உருவாக்ககூடியது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மூளையில் குறிப்பிடத்தக்க விளைவுகளைக் காட்சிப்படுத்துதல்கள் உண்டாக்குவதையும் ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன. இந்த உலகில் நிகழ்ந்த அத்தனை கண்டுபிடிப்புகளும் இரண்டு முறை நிகழ்ந்தவை. ஆம் ஒன்று மனக்கண்ணால்; மற்றொன்று கண்முன்னால். இது எல்லா தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியின் முடிவுகளுக்கும்கூட பொருந்தக்கூடியது.
எப்படி சுவாசம் நம் கவனமின்றி நிகழ்கிறதோ அதுபோல காட்சிப்படுத்துதலும் திட்டமிடாமலே நமக்குள் ஒவ்வொரு கணமும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எப்படி சுவாசத்தைக் கவனித்து நாளின் சில நிமிடங்களிலேனும் சுவாசத்தைச் சீராக்கிக் கொள்கிறோமோ அதுபோல நமக்குத் தேவையானதை, நிகழ விருப்பமுள்ளதைக் காட்சிப்படுத்திப் பார்ப்பது பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே இந்நூலின் சாராம்சம்.
----
மனதின் உச்சபட்ச செயல்திறனை வெளிக்கொண்டு வருவதற்கான செயல் முறைக் கருவியே இப்புத்தகம். தன்னிகரற்றப் பயிற்சிகளைத் தன்னகத்தே கொண்டுள்ள இக்கருவூலம் நீங்கள் விரும்பிய அனைத்தையும் உங்கள் கைவசமாக்கும். எண்ணியது எண்ணியவாறு ஈடேறும்.
உங்கள் ஆசைகளை நிறைவேற்றும் பாதையில் எதிர்ப்படும் தடைகளைத் தகர்த்தெறிந்து நீங்களே வியக்கும் வகையில் உங்கள் மன வரைபடம் மெய்யாகும் உன்னதக் காட்சியைக் கண்முன் காண்பீர்கள்.
அனைத்து வெற்றிகளையும் வாரி வழங்கி எண் திசைகளிலும் பாதுகாப்பை நல்கி உங்கள் வருங்காலத்தை உறுதியுடன் வடிவமைக்கும் புத்தகப் பொக்கிஷம் இது உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் உயர்ந்த வாழ்வை உருவாக்குவதற்கான காட்சிப்படுத்துதலை இந்த நொடியே ஆரம்பியுங்கள்!
Be the first to rate this book.