'எங்கள் ஊரைப் போல வராது' என்று சொல்லிக்கொண்டு வரும் மக்களை. 'நம்ம சென்னை என்று சொல்ல வைத்துவிடும் பெருமைக்குரியது இந்தச் சென்னை மாநகரம். இந்த நகரத்தின் அத் தனை கோணங்களையும் காவிரி மை தொட்டு வரைந்திருக்கிறார் சந்தியா நடராஜன். கூவக்கரை ஓவியத்தில் கொலுவிருக்கிறது ஒளியும் நிழலும் ஆடும் இருமையின் வசீகரம். நகரத்துத் தேரில் வீதியுலாக் காண்கிறது அனுபவத்தின் சுடர்.
சந்தியா நடராஜன் மனிதர்களைச் சேமிப்பவர். அதனால் நூலில் பல்லுருக்காட்டுகிறது மனித கலைடாஸ்கோப். அறியத் தவறியதைச் சுட்டுகிறது ஆரவாரமற்ற அறிவின் குரல். பழமையின் உள்ளங்கை ரேகையை விரித்துக் காட்டுகிறது அன்பின் கரம். காலம் புதைத்து வைத்த பண்பாட்டு ரசத்தைச் சுவைக்க அழைக்கிறது 'தருமமிகு சென்னை. நூலை வாசிக்கும்தோறும் நமக்குள் பெருகுவது பெருமிதத்தின் வெள்ளோட்டம். இந்நூலின் செம்மை என்பது இயல்பான மொழிநடையின் உயிரோட்டம்.
சந்தியா நடராஜன் என்றழைக்கப்படும் முத்தையா நடராஜன் 13.01.1960இல் காவிரிக்கரை நகரமாகிய மாயவரத்தில் பிறந்தவர். சென்னை சுங்கத்துறையிலும், மத்திய வருவாய் புலனாய்வுத்துறையிலும் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள இவர் ஒரு கவிதைத் தொகுப்பும் 3 கட்டுரைத் தொகுப்புகளும், 10 மொழிபெயர்ப்பு நூல்களும் வெளியிட்டுள்ளார். இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள 'கலைஞர் மு.கருணாநிதி வரலாறு' என்ற நூலுக்கு தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான பரிசு வழங்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
Be the first to rate this book.