தமிழக கோபுரக்கலை என்பது மிகவிரிவாக படித்துணரப்படவேண்டியது. விஜயநகர காலக்கட்டடக்கலையை அறிய தேவிகாபுரம் திருக்கோயில்கள் நல்ல சான்றாகும். இக்கோயில் கட்டடக்கலை பற்றியும் சிற்பக்கலை பற்றியும் முழுமையான ஆவணமாக இந்நூல் திகழ்கிறது. இவ்வூரில் உள்ள அனைத்துச் சிற்பங்களையும் ஆவணப்படுத்தும் பெருமுயற்சியாக இந்நூல் அமைந்துள்ளது. கருவறை முதல் கோபுரம் வரை 4000த்திற்கும் மேற்பட்ட சிற்பங்கள் ஆவணப்படும் முயற்சியுடன் கட்டடக்கலைக்கு நல்ல தமிழ்ச் சொற்களைப் புகுத்திபுதுமை கண்ட புத்தகமும் கூட. தமிழக கலை வரலாற்றில் இது ஓர் முன்னோடி முயற்சி எனலாம்.
Be the first to rate this book.