மதம் கடந்த இப்பத்து இறைவணக்கப் பாடல்களை நாராயண குரு என்ற மகாகவியால் மட்டுமே இயற்றமுடியும். அதற்கு எம்மதங்களின் மேல் நிற்காமல் இருப்பதும், விருப்பும் வெறுப்பும் அற்றதுமான தரிசனம் வேண்டும் குருவின் பாடல்கள் இறகு போல மிக எடையற்றவை. இத்தனை நேரடியான எளிய பிரார்த்தனையை இயற்ற மனம் ஆகாயம் போலத் தெளிந்து விரிந்திருக்கவேண்டும். குரு இப்பாடல்களில் எந்த மத இறைவளின் பெயரையும் குறிப்பிட்டு நதிக்கவில்லை. காலையில் இயல்பாக வான் நோக்கி எழும் பறவையின் குரல் போல பிரபஞ்சத்தை நோக்கிப் பிரார்த்தித்துக்கொள்கிறார். எம்மதத்தைச் சேர்ந்தவர்களும் இப்பாடல்களைக்கொண்டு பிராத்திக்கலாம். மதங்களைச் சாராதவர்களும் கூட இப்பாடல்களைப் பாடலாம். எந்த இறைவனை நோக்கியும் பாடத்தக்கப் பாடல்கள் இவை.
Be the first to rate this book.