மாணவர்களுக்கு பெரும்பாலும் கணிதம் என்பது சிக்கலான பாடமாகவே உள்ளது. அதை மாணவர்களுக்கு பிடித்த செயல்பாடுகள் மற்றும் விளையாட்டுகள் மூலமாக விளக்கும்போது கணிதத்தின் மீதான ஆர்வம் மாணவர்களிடையே ஏற்படும். இதற்கான எடுத்துக்காட்டுதான் இந்தப் புத்தகம். எனவே விழியன் மாமாவின் கிரிக்கெட்டில் சுழலும் கணிதம் என்னைப் போன்ற அனைத்து சிறார்களின் கரங்களிலும் தவழவேண்டுமென்று நான் விரும்புகின்றேன்.
சிறார் எழுத்தாளர். சிறுவர்களுக்குக் கதை கட்டுரைகள் எழுதுவதோடு, கணிதக் கட்டுரைகளையும் எழுதி வருபவர். கணித ஆர்வலர். சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். எம்.டெக் பட்டதாரி. கணிதம் கற்பிப்பதில் உள்ள சவால்களை ஒட்டி தமிழகம் எங்கும் பேசியும் பயிற்றுவித்தும் வருகிறார்.
Be the first to rate this book.