இரண்டு முறை ஹார்ன் சத்தம் கேட்டது. எங்களை விலகிச் செல்லுமாறு கூறும் சமிக்ஞை அது. ஏற்கெனவே நாங்கள் ஓரமாகத்தான் நடந்துகொண்டிருந்தோம். ஆனால் அந்த டிரக் தடம் மாறாமல் நேரே வந்து பக்கவாட்டில் எங்கள்மீது மோதிவிட்டு இருளுக்குள் மறைந்தது. ‘பவர் சிமெண்ட்ஸ்’ என்ற போர்ட் வெளிச்சத்தில் மின்னி மறைந்தபோதுதான், நிலைமையின் தீவிரம் எங்களுக்குப் புரிந்தது. கால்களில் கடுமையாக காயங்கள், கெண்டைக்கால், முழங்கால் என்று கால்கள் முழுதும் சிதைந்திருந்தாலும் இன்னும் உயிருடன்தான் இருக்கிறோம் என்ற எண்ணம் மனத்திற்கு நிம்மதியைத் தந்தது.
ஆனால், சாவல்பூரில் யாரும் விபத்திற்குக் காரணம் ‘பவர் சிமெண்ட்ஸ்’ நிறுவனத்தின் டிரக்தான் என்பதை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை.
எங்கள் கனவுகளில் இருக்கும் சாவல்பூரை யாராவது ஒருவர் என்றாவது எங்களுக்கு மீட்டுத் தருவார் என்ற நம்பிக்கையோடு இந்தக் கதையைச் சொல்கிறேன்
Be the first to rate this book.