பண்டைய இலக்கியப் படைப்புகளுக்கும் நவீன இலக்கியப் பிரதிகளுக்கும் இடையில் வலுவான தொடர்பு, நிலவுகிறது. சங்க இலக்கியம் சித்திரிக்கிற வாழ்க்கைக்கும் இன்றைய சமூக வாழ்க்கைக்கும் ஒத்திசைவு உள்ளது என்ற நாசிமின் கண்டுபிடிப்புதான், 'காஃபி வித் கபிலர்' நூலாகியுள்ளது. மிகப் புதியதில் மிகப் பழையதின் சாயல் இருக்கிறது என்பதுதான் நர்சிம் சொல்ல விழைவதா?
இன்று தனிமனிதரீதியில் ஒவ்வொருவரும் தனக்குள்ளாகவே குமைந்து கொண்டிருக்கும் நிலையில், குற்றம், பயம், நம்பிக்கை வறட்சி, குற்றமனம் போன்றவை அதிகரித்துள்ளன. இத்தகைய சூழலில், ஒவ்வொரு மனிதனும் அந்நியமாகிக் கொண்டிருக்கிறான். கார்ப்பரேட்டுகளின் மேலாதிக்கமும் நுகர்வுப் பண்பாடும் ஊடகங்களின் ஆளுகையும் எங்கும் மேலோங்கியுள்ள சூழலில் மனித இருப்பு. அபத்தமாகியுள்ளது. பீதி, பயம், நாடோடித்தன்மை, குழப்பம் போன்ற உணர்வுகள், மேலோங்கியுள்ள காலகட்டத்தில் சங்க இலக்கியப் பின்புலத்தில் நர்சிம் விவரித்துள்ள கட்டுரைகள்/கதைகள், சமகால வாழ்க்கையைப் புரிந்திட உதவுகின்றன; விசாரணைக்குட்படுத்துகின்றன. சங்க மரபின் தொடர்ச்சியைத் தன்னுடைய எழுத்தின் வழியாக இளைய தலைமுறையினரிடம் கடத்துகின்ற நர்சிமின் இலக்கிய முயற்சி, சமகாலத்தின் தேவையாக வெளிப்பட்டுள்ளது.
- ந.முருகேசபாண்டியன்
Be the first to rate this book.