கிராமத்தில் வானம்பாடியாய் சுற்றித்திரிந்திருந்த எனக்குள் எப்படி தன்னிச்சையாக சினிமாவும் இலக்கியமும் வந்து சேர்ந்து கொண்டன என்பதைச் சொல்கிற கதை. அதன் மூலம், அவை என்னவெல்லாம் வழங்கியிருக்கின்றன என்பதை சொல்கிற கதையும் கூட.
ஒரு ரசிகனாய், பின் ஒரு படைப்பாளனாய், சினிமா மற்றும் இலக்கியம் குறித்த எனதான தேடல் எந்தப் புள்ளியில் துவங்கியது,எந்தெந்த பாதைகளில் தாளாத பரவசிப்போடு அழைத்துச் சென்றது. எப்படிப்பட்ட தருணங்களில் அதன் தேடல் குறித்த கண்டடைதல்கள் சாத்தியப்பட்டன என்பதை உணர்வு வழி சொல்லிச் செல்கிறது. அந்த பயணத்தின் பாதைகளில் தரிசித்த படைப்புகளின் பரவசங்கள்,கற்றுக்கொண்ட திரைமொழியின் சூட்சுமங்கள் அனைத்தையும் போகிறவழியில் தொட்டுச் செல்கிறது.
Be the first to rate this book.